Advertisment

அரசாங்க வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி; பலே ஆசாமியை தட்டி தூக்கிய போலீஸ்

Rs. 18 lakh fraud by claiming to buy government jobs

கள்ளக்குறிச்சி வட்டம் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் முகநூல் பக்கத்தில் அரசாங்க வேலை வாங்கி தருவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதன்பிறகு கிருஷ்ணன் அதில் இருந்த முகநூல் கணக்கைத் தொடர்புகொண்டு பேசிய போது, அந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆர்.டி.ஒ க்ளர்க் வேலை வாங்கி தருவதாகக் கூறியதாகவும், அந்த வேலையை பெறுவதற்குப் பணம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனை உண்மையென நம்பிய கிருஷ்ணன் 216 தவணைகளில் மொத்தம் ரூ. 18,15,000 பணத்தை அந்த நபர் கொடுத்த வங்கிக் கணக்குகளுக்குக் கிருஷ்ணன் அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பிறகு எந்த தகவலும் இல்லாத, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணன் சைபர் கிரைம் பிரிவுல் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இதனை விசாரித்த கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலிசார் கடந்த 24 ம் தேதி அன்று ஜெர்ரி மேக்ஸ் (30) என்பவரைத் திருப்பூர் மாவட்டம், நச்சிபாளையம் கிராமத்தில் உள்ள அவரது விட்டில் வைத்து காவல் ஆய்வாளர் புவனேஷ்வரி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

arrested police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe