Rs. 15 lakh worth of gold confiscated!

அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியிடம் இருந்து 2 பொட்டலங்கள் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் பசை வடிவில் 298 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது

Advertisment

அதனைத் தொடர்ந்து அதே பயணி உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த மின் சாதன பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு 15 லட்சத்து 87 ஆயிரம் என்றும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட மின்சாதன பொருட்களின் மதிப்பு 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment