jkl

Advertisment

சென்னையில் தற்போது பெய்து வரும் மழையால் பல இடங்களில் சாலையில் பள்ளம், விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு சாலை விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

சின்னமலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளமான சாலையில் இரண்டு சக்கர வாகனம் சறுக்கி அருகில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் அடியில் வாகனம் சிக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானார். இந்நிலையில், சென்னையில் உள்ள 10 மண்டலத்தில் உள்ள குறைபாடான சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய 1.5 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பள்ளமான, குறைபாடு உடைய சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.