Advertisment

'ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்குக'- தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!

 Rs. 12,500 for each family - Resolution at DMK Advisory Meeting

Advertisment

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில்தோழமை கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்றுதொடங்கி நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் ஒதுக்கீடு,கரோனாதடுப்பு நடவடிக்கையில் மத்திய,மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள்,ம.தி.மு.க., வி.சி.க., கொ.ம.தே.க. ஆகிய தி.மு.க.வின் தோழமைகட்சிகள்பங்கு பெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் பொதுமுடக்கத்தால்பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு சார்பில் 7,500 ரூபாயும், மாநில அரசு சார்பில் 5,000 ரூபாய்என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபாய் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

all party meeting corona virus
இதையும் படியுங்கள்
Subscribe