Advertisment

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1,22,000 பணம் பறிமுதல்...!

Rs 1,22,000 confiscated without proper documents

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கட்டுமாவடி சோதனைச் சாவடியில், வாகனசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேபோல் புதன்கிழமை (மார்ச் 3) மாலை பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார் (BEO) தலைமையில் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர்.

Advertisment

அப்பொழுது அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது, அதில் வந்த இருவர் தாங்கள் திருச்சி செல்வதாகக் கூறியுள்ளனர்.தொடர்ந்து இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்த தையாராம்(26) மற்றும் மீட்டாராம் (40) ஆகிய இருவரிடமும் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி ரூ. 1.22 லட்சம் பணத்தைப் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள். கைப்பற்றப்பட்ட பணம் அறந்தாங்கி உதவி ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisment

confiscated money aranthangi Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe