Advertisment

ஜூலை 15- ஆம் தேதி முதல் மாணவிகளுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை? 

Rs 1,000 scholarship for first students from July 15?

Advertisment

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உரிமைத் தொகையாக ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான வரும் ஜூலை மாதம் 15- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கல்வி வளர்ச்சி நாளான முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளில் இருந்து அமலுக்கு வரும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

மூன்று லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிஇந்த திட்டம்தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

students schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe