rs 1000 crores income tax department

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, கடந்த நவம்பர் 4- ஆம் தேதி ஹெரிட்டேஜ் குழுமத்துக்குச் சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். இந்தச் சோதனையில் ஹெரிட்டேஜ் குழுமம், ரூபாய் 1,000 கோடி வருமானத்தை மறைத்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக அத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் முதலீடுகளைப் பெற்று ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 800 ஏக்கர் நிலம் வாங்கியதும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெரிட்டேஜ் உட்பட இரண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ரூபாய் 250 கோடி முதலீடு செய்துள்ளதும், அதை வருவாயில் காட்டாததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisment