Rs 10 lakh worth of banned tobacco  seized

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை உட்கோட்டதில் தரகம்பட்டி என்ற இடத்தில் மிட்டாய் கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நாட்டுவெடி பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி எனும் இடத்தில் மிட்டாய் கடை ஒன்றில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் நாட்டுவெடி பொருட்களும் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 09.30 மணியளவில் திருச்சி குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர், திருச்சி சரக ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் நாட்டுவெடி பொருட்களை கைப்பற்றினர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்ப்புடைய சுப்ரமணி, ஆறுமுகம் பிள்ளை, லோகேஸ்வரன், சுப்ரமணி மற்றும் சுப்ரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்காவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனவும், நாட்டுவெடி பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.