திருப்பூரை அடுத்த போத்தனூரில் இருந்து தூத்துக்குடிக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 10 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர்பறிமுதல் செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பல்லடம் அடுத்த கரடிவாவி அருகே தேர்தல் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் 10 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த தொகைக்கான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.10 கோடியை பறிமுதல் செய்தனர்.
அந்த பணம்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பணம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.ஆனாலும் உரிய ஆவணம் இல்லமால் கொண்டுசெல்லப்பட்டதால் ரூபாய் 10 கோடி பறிமுதல் செய்யப்பட்டு பல்லடம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தனியார் வாங்கி அதிகாரிகளிடம் திருப்பூர் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் தொகை திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.