“Rs 1 Crore Revolving Fund for Relief to Fishermen” - Government of Tamil Nadu

தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 1 கோடி ரூபாய் சுழல் நிதி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கிக் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்குக்கீழ் செல்லும் நிலையில் உள்ளது. இதனால் மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்க முயற்சி எடுத்து வந்தது.

Advertisment

அவ்வாறு உருவாக்கப்பட்ட சுழல் நிதியில் இருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 இலட்சம்வழங்கும் பட்சத்தில் வாழ்வாதாரம், பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ளப் பேருதவியாக அமையும் என்பதால், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 50 லட்சமும் என ஆக மொத்தம் ஒரு கோடி ரூபாயைக் கொண்டு சுழல் நிதி உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.