Skip to main content

‘இறந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்’-எம்.எல்.ஏ. சின்னத்துரை கோரிக்கை!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

Rs 1 crore relief should be given to the family of a boy

 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது வெடித்த சில குண்டுகள் சிதறியுள்ளன. அப்போது கொத்தமங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி (11) என்ற 6ம் வகுப்பு படித்த மாணவன் நார்த்தாமலையில் உள்ள தாத்தா முத்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று மாணவன் தலையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு துளைத்து மயங்கிய நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று மாணவனை பார்த்து பெற்றோருக்கு ஆறுதல் கூறி தற்காலிக நிவாரணம் நிதியாக ரூ.1 லட்சம் வழங்கிச் சென்றார். அதே போல் நேற்று மாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் வெளியான நிலையில் நார்த்தாமலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சி மண்டலத்தில் இருந்து 5 மாவட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Rs 1 crore relief should be given to the family of a boy

 

இந்த நிலையில் சிறுவன் காயமடைந்தது முதல் தொடர்ந்து சிறுவனுக்காக மருத்துவமனையில் காத்திருந்து ஆட்சியர்வரை பேசியிருந்த கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. (சிபிஎம்) சின்னத்துரை சிறுவன் இறந்த தகவல் அறிந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரைப் பார்த்து கதறி அழுத பெற்றோரைத் தேற்ற முடியாமல் எம்எல்ஏ கண்ணீர் வடித்தார். அதே போல் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, பெற்றோர் தங்குவதற்கு வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை  தர வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து நீதிவிசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார். 

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.