கச்சநத்தம் படுகொலைக்கு எதிரான கூட்டத்தில் வெடித்த பா.ரஞ்சித், மனுஷ்யபுத்திரன் 

ammer

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த சாதி மோதலில் 3 பேர் பலியானார்கள். இதையடுத்து, சாதியத்திற்கு எதிராய் அணி திரள்வோம் மனித மாண்பை மீட்போம் என்ற கருத்தரங்கம் இன்று மாலையில் சென்னை மேற்கு மாம்பலம் வி.கே.எம். மண்டபபத்தில் நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித்இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்.

சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல் திருமாவளவன், தி.க. அருள்மொழி, மனுஷ்யபுத்திரன், இயக்குனர் அமீர், கிரேஸ்பானு, கொளத்தூர்மணி, வெற்றி மாறன், வழக்கறிஞர் ராஜகுரு, லெனின் பாரதி, மீரா கதிரவன் ஆகியோர் வந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் கிரேஸ்பானு பேசியபோது, ‘’இது ஒன்றும் புதிதல்ல. தொடர்ந்து இந்த மக்களை வஞ்சித்து வருகின்றனர் சாதி வெறியர்கள். இதற்கு எது காரணமாக இருக்கிறது என்றால் தலித் மக்கள் பொருளாதார நிலையில் முன்னேறி வருவதே இதற்கு ஒரே காரணமாக இருக்கிறது.

நாங்கள் சமத்துவத்தையும் பற்றி பேசுவதும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமலும் எங்களுடன் சமத்துவத்தையும் சித்தாந்தம் அறிவார்ந்த முறையில் பேசமுடியாத நிலையில் இதை அடக்கவேண்டும் என்பதற்காக ஆயுதத்தை தன் கையில் எடுக்கின்றனர்.

நாங்களும் ஆயுதம் ஏந்துவோம். ஆனால் அப்படிப்பட்ட தலைமையில் நாங்கள் வளரவில்லை அம்பேத்கார் வழியில் செல்கிறோம் ஜெய்பீம்’ என்றார்.

அருள் மொழி பேசியபோது, ‘’கச்சநத்தத்தில் பச்சை ரத்தம் பாய்ந்தது . சாதியை எப்போது நாம் மற்றவர்களுடன் பேசும் போதே நீங்கள் என்ன சாதி என்று பேசுவதே இந்த உணர்வுக்கு வழி வகுக்கிறது.

இதுபோன்ற பிரச்சினைக்கு அறிவுதளத்தில் பேசுகிறோம் என்றாலும் கூட நாம் இன்னும் வெகு மக்களிடம் சமத்துவத்தையும், சுயமரியாதையையும் கொண்டுச் சேர்க்கவில்லை. அதனால் இன்னும் களம் காணவேண்டும்.

பூனூலோடு பிறந்தவன் உயர்ந்தவன் என்பதை போல அருவாலோடு பிறந்தவன் என்பது ஒரே பார்வைதான் இதை மாற்றிக்கொள்ள போகிறோம் என்பதுதான் நமது அடுத்த இலக்கை நோக்கி செல்லவேண்டும்’’என்றார்.

கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பேசியபோது, ‘’ கொல்லப்பட்ட சண்முகநாதன் தாயும் தந்தையும் ஆசிரியர்கள். இந்த சண்முகநாதன் உடல் முழுவதும் 67 இடங்களில் கண்டம் துண்டுமாக வெட்டப்பட கொல்லப்பட்டு உள்ளார். இதற்கு மருத்துவமனையில் டாக்டர்,மற்றும் மக்களும் சாராயம் குடித்து விட்டுத்தான் வெட்டினார்கள் என்றும் கஞ்சா அருந்திவிட்டுதான் வெட்டியிருப்பார்கள் என்றால் அதுவல்ல உண்மையிலே அவர்கள் போதை அருந்திவிட்டு வெட்டினார்கள் என்பதை தாண்டி சாதிய போதையில் வெட்டி இருக்கிறார்கள்.

படத்தில் வரும் தேவர் பாடல் இவையெல்லாம் வட மாநிலத்தில் பாதிப்பு என்பது அதிகமாக இருக்கு இதை மாற்ற வேண்டும்’’என்றார்.

ணட

பா. ரஞ்சித் பேசியபோது, ‘’ சாதிய பெயரால் நாம் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியே போய் கொண்டிருக்க போகிறோம். குடியரசுத்தலைவர் அவர்களை கோயிலுக்கு போகவிடாமல் வெளியிலே நிற்கவைத்துள்ளனர். அவருக்கு இந்த நிலை. அவரே என்னை உள்ளே விடாத இடத்தில் நான் எதற்கு நிற்கவேண்டும் என்று பாராமல் நிற்பதுதான் அவர்களின் வெற்றி. சாதி முறை ஒழிக்காமல் சமுத்துவத்தை ஒழிக்க முடியாது. இந்தியை எதிர்த்து எப்படி மையைக்கொண்டு இந்தியை அழித்தார்களோ அதேபோல் ஒவ்வொரு தெருவிலும் சாதி பெயர் இருக்கிறது அதை அதேபோல் இதையும் அகற்றவேண்டும்’’என்று கூறினார்.

திருமாவளவன் பேசும் போது, கோயில் திருவிழாவில் பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடாது என்ற காரணத்தால்தான் காவல்துறை புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு காவல்துறையில் புகார் கொடும் அளவிற்கு தைரியம் வந்து விட்டதா என்று மக்களை வீடு புகுந்து வெட்டியுள்ளனர் எவ்வளவு கொடூரமான செயல் இது.

மதவாதிகளாக உள்ள மோடியின் கொள்கையான ஒரே தேசம், ஒரே மொழி என்ற கொள்கை இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழித்திடக்கூடியது.. ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்குமுறையை எதிர்க்கும் ஒத்த குறிக்கோளை கொண்டவர்களாக இருவரும் இருந்தததால் தான் பிரபாகரனை ஆதரித்தேன்..

சாதியை ஒழிக்காமல் தமிழ் தேசியத்தை வென்றிடுக்க முடியா மதவாதசக்திகளை ஒழித்திட அனைவரும் கைகோர்த்திட வேண்டும்.

டாக்கடர் ஷாலினி பேசுகையில், ‘’ ஒருதாய் தன் குழந்தைகளுக்கு அறிவுபூர்வமாகவும், சாதியமில்லை என்றும் சொல்லி வளர்க்காத தாய் இருப்பதே இதற்கு முதல்காரம். அதை எப்போது மாற்றப்போகிறோம். மரபனுவும் மனகருத்தும் ஒன்றுதான். இதை மாற்றாமல் சம உரிமை கிடைக்காது’’என்றார்.

மனிஷ்யபுத்திரன் பேசியபோது, ‘’சாதி என்பது ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்று இருக்கிறது. சாதி கிராமம் என்பது தனி நாடாக இருக்கின்றது. இதை மாற்றாமல் மாற்றத்தை கொண்டு வர முடியாது. இந்த கூட்டமே சாதி பிரச்சனை பேசாமல் அதை எப்படி தீர்வுகானமுடியும் என்பதை பார்க்கவேண்டும். இங்கு சமத்துவஉரிமையை எனக்கு தற நீ யார் ? எனக்கு கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் மனிதனாக இருந்தால் போதும். இந்த நாட்டிலே ஊழலில் பெரிய ஊழல் எது என்றால் அது சாதிய ஊழல்தான்.

இலக்கியப்படைப்புகள், திரைப்படத்தில், ஆதிக்கசாதியர் ஆதிக்கமே படமாகவும், செய்தியாகவும் வரும் நிலையே ஜனநாயக நடத்தப்படுகிறதா என்றால் இல்லை. இதுதான் இடைநிலை சாதிகளிடம் போட்டிக்கு காரணமாக விளங்குகிறது. இதுபோன்ற கூட்டம் அரங்கத்திற்கு வெளியிலும் செயல்படவேண்டும்’’என்றார்.

broke owho ut at the meeting against the murder of Kachanadam Manushyuputran R.Ranjith Kumar
இதையும் படியுங்கள்
Subscribe