Advertisment

மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்கிய ராயில் என்ஃபீல்ட் ஊழியர்கள்...

rr

சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்ட் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மதியம் 3 மணி முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 24 முதல் நவம்பர் 12 வரை இவர்கள் ஏற்கனவே வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisment

தற்போது மீண்டும், சம்பள உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்திரமாக பணியமர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிருத்தி மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பிப்ரவரி 12-ம் தேதி போராட்டத்தை அறிவித்து, நேற்று மதியம் 3 மணி முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் ஒரு மாதம் வரை நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் அந்நிறுவனத்தின் உற்பத்தியில் 28,000 வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

royal enfield
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe