Skip to main content

''நீ காக்கி சட்டையை கழட்டி வச்சிட்டு வா...''-போலீசுக்கே சவால் விடும் ரவுடியின் வைரல் ஆடியோ! 

Published on 05/09/2021 | Edited on 05/09/2021

 

Rowdy's viral audio challenging the police!

 

மதுரையில் தனிப்படை பிரிவு போலீசார் ஏட்டு ஒருவருக்கு ரவுடி ஒருவர் சவால் விடும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை நகர் தனிப் படை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் செந்தில். இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்த நிலையில், அந்த அழைப்பில் பந்தல்குடி ரவுடி ராஜேஷ் என்பவர் பேசியுள்ளார். அந்த ஆடியோவில், ''என் கைகால்களை உடைப்பேன் சொன்னியாமே.. நீ எங்க இருக்கேன்னு சொல்லு நான் வரேன்... நீ காக்கி சட்டையை கழட்டி வச்சிட்டு வா... சண்டை போடுவோம். நான் வீரன். மூணு நாள்ல விபி குளத்தில் ஒருத்தனை கொன்னுடுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்'' என மிரட்டும் வகையில் திமிராக பேசியுள்ளார். எதிர்ப்புறத்தில் பேசும் ஏட்டு செந்திலோ,  ''என்ன நடக்குது என்று தெரியாமல் பேசாதே'' என பதிலளிக்கிறார். இப்படி ரவுடி ஒருவர் மிரட்டல் விடுவதோடு ஒருவரை கொலை செய்ய இருக்கிறேன் என சொல்லி சவால் விடுவது தொடர்பான இந்த ஆடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்நிலையில் மிரட்டல் விட்ட ரவுடி ராஜேஷை மதுரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்