நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடந்த 3ஆம் தேதி ரவுடி நொன்டி (எ) தனபால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் கொலையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வெப்படை அருகே மோடமங்கலம் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது இரண்டு பைக்கில் வந்த 5 பேர் போலீசார் வாகன தணிக்கை செய்வதை கண்டு வந்த வழியே திருப்பி செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை துரத்தி மடக்கி பிடித்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பிறகு பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு அவர்களை கொண்டு வந்து விசாரித்த பொழுது ரவுடி நொண்டி (எ) தனபால் கொலை வழக்கில் தாங்கள் தொடர்புடையவர்கள் என ஒப்புக்கொண்டனர். ரவுடி நொண்டி என்கிற தனபாலுக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். பிறகு பல பேருடன் சேர்ந்து ஊரில் சுற்றித்திரிந்து அடிதடி, வழிப்பறிகளில் ஈடுபட தொடங்கி சென்ற வருடம் திருச்செங்கோடு மலை அடிவாரம் பகுதியில் உள்ள ரவுடி வளத்தி மோகன் என்பவர் கொலை வழக்கில் 13 பேரில் தனபாலும் ஈடுபட்டுள்ளார்.
தேவனாங்குறிச்சி சேர்ந்த பைனான்சியர் குப்புசாமி என்பவருடன் தனபாலுக்கு நெருக்கம் ஏற்பட்டு, பழகி வந்தநிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இருவருக்கும் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட தகராறில் தனபால் குப்புசாமியை கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல்நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்திட்டு வந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த நிலையில் தான் கடந்த மூன்றாம் தேதி தேவனாங்குறிச்சி அருகில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் தனபால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீசார் திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதற்கு நடுவேதான் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பிடிபட்டவர்கள் ரவுடி நொண்டி தனபாலை கொலை செய்தது தெரிய வந்தது.
2018 ஆம் ஆண்டு பைனான்ஸ் அதிபர் குப்புசாமியை ரவுடி தனபால் கொலை செய்ததை தாங்கமுடியாத அவரது உறவினர் நாட்ராயன் என்பவர் பழிக்கு பழியாக தனபாலை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த ஆறு மாதகாலமாக ரவுடி தனபாலை பின்தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். பின்னர் கடந்த மூன்றாம் தேதி தேவனாங்குறிச்சி அருகேயுள்ள இறைச்சிக் கடைக்கு பின்னால் மது அருந்த வந்த தனபாலை நாட்ராயன் தனது நான்கு கூட்டாளிகளுடன் வந்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளார். ரவுடிகள் மோதல் கொலை சம்பவங்கள் என அமைச்சர் தங்கமனியின் தொகுதி பரபரப்பாக பதட்டமாக உள்ளது.
.