சென்னையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரை ரவுடிகள் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே தகராறு நடப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இ2 ராயப்பேட்டை காவல்நிலைய காவலர் ராஜவேலு ரோந்து சென்றார். அங்கு 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக்கொண்டிருந்து சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது காவலர் ராஜவேலு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் காவலர் தனியாக வந்ததால் போதையில் இருந்த ரவுடிகள் 5 பேரும் காவலரை அடிக்க தொடங்கியுள்ளனர். இதனால், காவலர் ராஜவேலு அந்த ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். எனினும் அந்த ரவுடி கும்பல் காவலரை விடாமல் கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டியதாக தெரிகிறது.
பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் ரவுடிகள் தப்பிச்சென்றுள்ளனர். இதில் காவலர் ராஜவேலுக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறியது உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காவலரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியது ரவுடி அரவிந்தன் உள்பட 5 பேர் என்று தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.