Advertisment

இன்ஸ்பெக்டரை மிரட்டிய ரவுடி! காவல்நிலையத்தின் பாதுகாப்பே கேள்விக்குறி!

tenampet

மக்களைக் காக்க வேண்டிய தமிழக காவல்துறை, தன்னைக் காத்துக்கொள்ள வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது. போகிற போக்கில் யாரோ இதைச் சொன்னால், ‘போலீஸ்ன்னா இப்படித்தான் எதையாச்சும் கிளப்பி விடுவாங்க’ என்று விட்டுவிடலாம். நம்மிடம் புலம்பியதோ காக்கிகள் வட்டாரம்தான்! விசாரித்தபோது, ரவுடி ஒருத்தனின் மிரட்டல் விவகாரத்தை அறிய முடிந்தது.

Advertisment

எந்த ரவுடி யாரை மிரட்டினான்?

75 ரவுடிகளை கொத்தாக தூக்கினோம் என்று சென்னை சிட்டி போலீசார் மார் தட்டினாலும், உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சென்னை தேனாம்பேட்டை இ3 காவல்நிலையத்தை எடுத்துக்கொள்ளலாம். அங்கு பேரிகார்டு போட்டு, காவல்நிலையத்தைக் காவல் காக்கும் பணியில் காவல்துறையினரே ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு ரவுடியின் மிரட்டல் இருக்கிறது.

Advertisment

பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு மற்றும் பல ரவுடிகள் பிடிபட்ட பிறகு, சென்னையில் உள்ள மற்ற தாதாக்களையும் பிடிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். இதனைத் தொடர்ந்து, சென்னை, தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிரி, குற்ற வழக்கு ஒன்றின் விசாரணையை கணேசன் என்பவரிடம் மேற்கொண்டிருக்கிறார். உடனே, கணேசனின் தம்பியும், சி.டி. மணி என்ற ரவுடியின் கூட்டாளியுமான தவக்களை பிரகாஷ் என்பவன், செல்போனில் தொடர்புகொண்டு ஆய்வாளர் கிரியை கடுமையாக மிரட்டியிருக்கிறான். ‘என் அண்ணனையே கைது செய்யும் அளவுக்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா?’ என்று மிரட்டிவிட்டு, சமீபத்தில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தியிருக்கிறான். தவக்களை பிரகாஷ் மட்டுமல்ல, மேலும் சில ரவுடிகளும் ஆய்வாளரை மிரட்டியிருக்கின்றனர். இந்த மிரட்டல் பேச்சுக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான், இன்ஸ்பெக்டர் கிரிக்கும் அவர் பணியாற்றும் காவல் நிலையத்துக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

காக்கிகள் வட்டாரத்திலிருந்து ‘லீக்’ ஆகியிருக்கும் இந்தத் தகவல், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்பது, எத்தனை பரிதாப நிலையில் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

tenampet Rowdy threatens inspector security of the police station question
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe