Advertisment

சேலத்தில் ரவுடி தீக்குளித்து தற்கொலை!

சேலத்தில் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றதால் விரக்தி அடைந்த பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சேலம் நாராயண நகர் குறிஞ்சி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் வைத்தீஸ்வரன் (28) பிரபல ரவுடி. இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. ரவுடி வைத்தீஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் மது போதையில் வரும் அவர், குறிஞ்சி நகரில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அவருடைய மனைவி பலமுறை கண்டித்துள்ளார்.

Advertisment

 Rowdy sets himself suicide in Salem family problem

ஆனாலும் வைத்தீஸ்வரன் குடித்துவிட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்தார். இதனால் சில நாள்களுக்கு முன், கணவருடன் கோபித்துக் கொண்டு சசிகலா அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் வைத்தீஸ்வரன் மனைவி சசிகலாவிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், அவர் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த வைத்தீஸ்வரன், வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 28) தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சனிக்கிழமை (ஜூன் 29) உயிரிழந்தார்.

Advertisment

family problem narayana nagar rowdy Salem Suicide Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe