Rowdy passed away near trichy

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர்(35). முக்கிய ரவுடியான இவர் மீது, அப்பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு சொந்தமாக தேங்காய் நார் தொழிற்சாலை மண்ணச்சநல்லூர் வெங்ககுடியில் உள்ளது. அந்த தொழிற்சாலையில் அவர் நேற்றிரவு கட்டிலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை வெட்டி படுகொலை செய்துள்ளது. படுகொலை செய்த மர்ம கும்பல் கெளரிசங்கர் உடலுக்கு மாலை அணிவித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து அங்குச் சென்ற மண்ணச்சநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.