kiilers

புதுச்சேரி காந்தி நகர் பகுதியில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பு முன்விரோதம் காரணமாக ஜாக்கி என்கின்ற சரவணன் (வயது 25) என்ற ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்தது.

புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

rowdy

இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ரவுடி ஜாக்கி சரவணன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கொலையாளிகள் தப்பிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிமேடு தன்வந்திரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.