Advertisment

ரவுடி ஜான் கொலை வழக்கு; மேலும் இருவர் சரண்  

Rowdy John murder case; Two more surrender

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்தவர் ஜான். இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட 14 வழக்குகள் சேலம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை அவருடைய மனைவி சரண்யாவுடன் மாமனார் வீடு அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் பவானி பகுதிக்கு சென்றுள்ளார்.

Advertisment

அவருடைய மனைவி சரண்யா காரை இயக்கிய நிலையில் இவர் இடதுபுறமாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென காரை ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்தனர். பவானி, சித்தோடு காவல்நிலைய எல்லைப் பகுதியில் உள்ள நசியனூர் பகுதியில் காரை வழிமறித்து ரவுடி ஜானை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.மனைவி தடுக்க முயன்றும் விடாமல் ரவுடி ஜான் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்த நாளான நேற்றே போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையில் ஈடுபட்ட மூன்று பேரை சுட்டுப் பிடித்தனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 4 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேலத்தை சேர்ந்த பார்த்திபன், சேதுவாசன், அழகரசன், சிவக்குமார், பெரியசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜீவகன், சலீம் ஆகிய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மொத்தமாக இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Erode police rowdy Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe