புதுக்கோட்டை புதுக்குளத்தின் அருகே பட்டப்பகலில் படுகொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையானவர் திருச்சியைச் சேர்ந்த ரவுடி இளவரசன் என்பது தெரிய வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் கல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (32). இவர் மீது காரைக்கால் முன்னாள்சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு, திருச்சி பன்னி சேகர் கொலையில் சம்பந்தப்பட்ட சிலம்பரசன் கொலை வழக்கு எனப் பல வழக்குகளும் வழிப்பறி வழக்குகளும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வந்த இளவரசன் பாதுக்காப்பிற்காக புதுக்கோட்டையில் சிலநண்பர்களிடம் அடைக்கலமாகி தங்கி இருந்துள்ளார். அத்தோடு மாலை நேரங்களில் புதுக்குளத்தில் நண்பர்களுடன் அமர்ந்திருப்பதுவழக்கமாகவும் இருந்திருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை புதுக்குளம் அருகே இளவரசன் வந்தபோது பல நாட்களாக நோட்டம் பார்த்திருந்த கும்பல் இளவரசனை வெட்டிப் படுகொலை செய்து தப்பிச் சென்றுள்ளனர். இளவரசன் பழிக்குப் பலியாகக் கொல்லப்பட்டாரா? கொன்றது திருச்சி கும்பலா, நாகை மாவட்ட கூலிப்படையா? எந்தக் கும்பலால் இந்தக் கொலை நடந்துள்ளது என்றபல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.