/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_84.jpg)
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பூச்சி என்கிற சுதாகர்(42). இவர் குல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் இறந்து பிறகு, அவரது மனைவியைத் தனது ஊருக்கு அழைத்து வந்து ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் சுதாகருக்கும், இறந்து போன ஜெகதீஷின் சகோதரர் பாஸ்கருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(10.9.2023) பாஸ்கர், கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்ததனது நண்பர் அர்ஜுன் ராஜ் என்பவருடன் சேர்ந்து சுதாகரின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார்.சத்தம் கேட்டு வெளியே வந்துபார்த்தபோது வாசலில் பாஸ்கரும், அர்ஜுன் ராஜும் நின்றுள்ளனர். இதையடுத்து வீட்டில் உள்ளவர்களை உள்ளேயே பாதுகாப்பாக வைத்துப் பூட்டிவிட்டு வெளியே வந்த சுதாகர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவிய இருவரும், அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு தம்பிச் சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் குற்றவாளியான பாஸ்கர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு குற்றவாளியான அர்ஜுன் ராஜ் மணல்மேடுபகுதியில் பதுங்கி இருப்பதாகத்தகவல் கிடைக்க, உடனடியாக விரைந்து சென்று தனிப்படை போலீஸ்அவரைக் கைது செய்தது. அப்போது, அர்ஜுன் தப்பி ஓடும்போது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவலர்கள்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இருவரிடமும் நடத்திய விசாரணையில், சுதாகர் தனது சகோதரரின் மனைவியை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வருகிறார். அதனை அவமானமாகக் கருதி அவரைத்தனது நண்பர் அர்ஜுன் ராஜ் உடன் இணைந்து கொலை செய்ததாக பாஸ்கர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் நீதி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)