Advertisment

ரவுடி படப்பை குணாவின் மனைவி கைது! 

rowdy Guna's wife arrested

காஞ்சிபுரத்தில் தேடப்பட்டு வரும் ரவுடியான படப்பை குணாவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்கின்ற குணா. தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த குணா ஒருகட்டத்தில் ரவுடி என்ற பட்டத்துடன் சுற்றிவந்தார். படப்பை குணா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்த ரவுடி குணா காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான்

Advertisment


.

rowdy Guna's wife arrested

ரவுடி குணாமீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 42 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட படப்பை குணா ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகஇருக்கும்குணாவைசிறப்பு டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.இந்நிலையில், தற்போது குணாவின் மனைவியை எல்லம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே ரவுடி குணாவுக்கு உடந்தையாக இருந்த காவலர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல் படப்பை குணாவுடன்தொடர்பில் இருந்த சிலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது அவரது மனைவியை கைது செய்துள்ளனர் போலீஸார்.

rowdy police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe