rowdy guna saithapet court order for today

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப் பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டதாகவும் ரவுடி படப்பை குணா மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், படப்பை குணா தலைமறைவானார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே, அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரவுடி படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை; சரணடைந்தால் விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (25/01/2022) சரணடைந்தார். அவரை வரும் ஜனவரி 31- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.