Advertisment

'பட்டப்பகலில் படுகொலை '-காரைக்குடியில் பகீர்

'Rowdy gang attack' -incident Karaikudi

காரைக்குடியில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

காரைக்குடி மாவட்டம் சேர்வை ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான மனோ என்கிற மனோஜ். கஞ்சா விற்பனையில் மனோஜ் ஈடுபட்ட நிலையில் அது தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிலையில் இன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் வந்துள்ளார்.

Advertisment

அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் ரவுடி மனோஜை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மனோஜின் உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கும் நிலையில் உடன் வந்த இரண்டு இளைஞர்களுக்கு காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. படுகொலை நடந்த பகுதி காரைக்குடியின் முக்கிய வணிகப் பகுதியாகும். எப்பொழுதுமே ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இப்படிப்பட்ட கொலை சம்பவம்நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நெல்லையில்ஓய்வு பெற்றகாவல் அதிகாரி ஜாகிர் உசேன் பிஜில்படுகொலை செய்யப்பட்டதும், ஈரோட்டில் சேலத்தைசேர்ந்த ரவுடி ஜான் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காரைக்குடியில் நடந்த இந்த கொலை மேலும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

Investigation police rowdy Karaikudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe