/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/651_27.jpg)
சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அய்யப்பன்தாங்கல், சின்ன கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ராஜ். ரவுடியாக வலம் வந்த ஸ்ரீகாந்த் ராஜ் மீது விருகம்பாக்கம், மதுரவாயல், கோயம்பேடு ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அவரது தந்தை பாலசுப்பிரமணியம் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஸ்ரீகாந்த் ராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளஸ்ரீகாந்த் ராஜ்படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவருடன் மது அருந்தியவர்கள் யார் என்றும், அவர்களைப் பிடிப்பதற்கும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவரது தந்தைபாலசுப்பிரமணியத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
டிரைவரான ஸ்ரீகாந்த் ராஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்குமோனிசா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)