சேலத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி!  

சேலத்தில் பிரபல ரவுடி ஒருவர் 200 க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் தனது பிறந்த நாளை கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Rowdy celebrated birthday with a cake cut in Broadsword

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஜீசு நேற்று தனது பிறந்த நாளை சக ரவுடிகள் படை சூழ கொண்டாடியுள்ளான். பட்டப்பகலில் சேலம் அருகே மலை அடிவார பகுதியில் கேக்கினை சுமார் மூன்று அடி நீளம் கொண்ட கத்தியால் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளான். அதற்கான ஏற்பாடுகளை ஜீசுவுடன் சுற்றி வரும் சக ரவுடிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பிறந்தாள் விழாவில் சேலத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ரவுடிகளும் பங்கேற்றுள்ளர். பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு மது பாட்டில்களும் பரிமாரப்பட்டுள்ளன. இரு நூறு பேரும் வெட்ட வெளியில் மது அருந்தி ஜீசுவின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

 Rowdy celebrated birthday with a cake cut in Broadsword

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னையை போன்று சேலத்திலும் ரவுடி ஒருவர் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. பிறந்த நாளை கொண்டாடிய ஜீசு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சேலம் நீதி மன்றத்தில் தனது எதிரி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. சேலத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமூக வலைதளத்தில் பரவிவரும் வீடியோ சேலம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

birthday police rowdy Salem
இதையும் படியுங்கள்
Subscribe