உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடி... சென்னையில் பரபரப்பு!

 Rowdy CD Mani, who shot the assistant inspector, caused a stir in Chennai!

தென் சென்னையில் பிரபல ரவுடியான சிடி மணி, பல்வேறு வழக்குகளில் சிக்கி, அதன் காரணமாகத் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் வைத்து ரவுடி சிடி மணியை போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு சிடி மணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில், நேற்று ரவுடி சிடி மணியை பிடித்துச் சென்றபோது, போலீஸ் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை அந்த ரவுடி துப்பாக்கியால் சுட்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட உதவி ஆய்வாளர் காயமடைந்த நிலையில், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிடி மணி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 6 கொலை வழக்குகள், 15 கொலை முயற்சி வழக்குகள், துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு போன்றவை அவதில் முக்கியமானவை ஆகும். ஏற்கனவே ஐந்து முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் சிடி மணியை தற்போது வரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai police rowdy
இதையும் படியுங்கள்
Subscribe