/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_116.jpg)
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த கருத்துரை பகுதியைச் சேர்ந்தவர் கோபால். ரவுடியான இவர், நேற்று முன்தினம் (09.10.2021) அதிகாலையில் தனது தோட்டத்திற்குச் சென்றபோது சில நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கரூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், ராஜபாண்டியன் என்பவர்களுக்கும் வேலூரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.இதையடுத்து கோபாலகிருஷ்ணனை கொலை செய்வதற்காக அவரை கண்காணித்து தகவல் அளிக்க சுரேஷ், வினோத் ஆகிய இருவர் சரவணகுமாரால் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தோட்டத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த கோபாலகிருஷ்ணனை, ராஜபாண்டியன், சரவணகுமார் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த நந்தகுமார், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மனோஜ், திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் என இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)