Advertisment

ரவுடி பினு மீண்டும் கைது

rowdy incident

Advertisment

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் ரவுடி பினு. இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குற்றச்செயல்களில் ஈடுபட்டது, அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பலமுறை போலீசாரால் பினு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவருவது வாடிக்கை. இந்த நிலையில் வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பினு கைது செய்யப்பட்டுள்ளான். பார்சல் நிறுவன ஊழியர் ஜானகிராமன் என்ற நபரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்ததாக போலீசாரிடம் புகார் போக இந்தப் புகாரின் பேரில் போலீசார் அவனைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்தில் ரவுடி பினுவுக்கு உதவிய அவனின் கூட்டாளிகள் ஹரி, காசிம் என்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai police rowdybinu
இதையும் படியுங்கள்
Subscribe