சென்னையில் கைதான ரவுடி ஒருவனுக்கு துப்பாக்கி கொடுத்த வழக்கில் ரவுடி பினு மீண்டும் கைது செய்யப்பட்டான். எண்ணூரைசேர்ந்த பிடி ரமேஷ் என்ற ரவுடியை கைது செய்த போலீசார் அவனிடம்இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

Advertisment

 Rowdy Binu arrested again!

ரமேஷ் வைத்திருந்த துப்பாக்கியை வாங்கி கஞ்சி செந்தில் என்பவரை மதுபோதையில் சுட்டதாக அலெக்சாண்டர் என்பவர் கோத்தகிரியில் கைதாகியுள்ளார். ரமேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த துப்பாக்கியை ரவுடி பினுவிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளான்.

Advertisment

 Rowdy Binu arrested again!

ஏற்கனவே இரண்டு முறை நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பினுகாவல்நிலையத்தில் கையெழுத்திடச் செல்லாததால் போலீசார் அவனைதேடி வந்தனர். இந்நிலையில் கொளத்தூரில் உள்ள தனது தாயை சந்திக்க வந்த பினுவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். துப்பாக்கி வாங்கிக் கொடுத்தது யார்,வேறு யார் யாருக்கு இதுபோன்று துப்பாக்கிகள் சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.