Rowdy arrested for trying to attack Neyveli Chief Constable

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் தண்டபாணி. இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது கீழக்கொல்லை அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்ற கொண்டிருந்ததை பார்த்து, “ஏன் இரவு நேரத்தில் இங்கே நிற்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நீங்க என்ன கேட்பது..” என கேட்டுள்ளார். இதனை ஒருமையிலும், மேலும், அவதூறான சொல்கொண்டும் சொல்லி அநாகரிகமாக திட்டியுள்ளார்.

Advertisment

மேலும், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தண்டபாணியை தாக்கியுள்ளனர். அப்போது தண்டபாணி விலகியதால், அவர் மீது கத்தி படவில்லை, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் அவருடைய மோட்டார் சைக்கிளை வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

Advertisment

Rowdy arrested for trying to attack Neyveli Chief Constable

பின்னர் தண்டபாணி, மற்றும் அவருடன் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் ஆகிய இருவரும் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முற்பட்டனர். ஆனால், இரண்டு பேரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எழுந்து போலீசாரை விரட்டி வந்த வீரமணியை மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து தண்டபாணி முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் அவரை கைது செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீரமணி மீது நெய்வேலி பகுதி காவல் நிலையத்தில் 10 வழக்குகள் உள்ளன. மேலும் வீரமணி குண்டாஸ் வழக்கில் இருந்து வெளியே வந்து 15 நாட்கள் தான் ஆகிறது. இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி காவலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.