நெல்லையில் அதிகம்மக்கள்கூடும் இடமான சரவணா செல்வரத்தினம் கடைமுன்னே வெட்டருவாளோடு ரகளையில் ஈடுபட்ட ரவுடிக்கு இறுதியில்கையில் மாவுக்கட்டு போடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

rowdy

rowdy

நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையின் வாயிலில் ரவுடி ஒருவன் கையில் வெட்டருவாளை வைத்துக்கொண்டு கடை ஊழியர்களை வெட்டப்போவதாக அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு ரகளையில் ஈடுபட, அவனை பிடித்துக்கொடுக்க முயன்ற ஊழியர்களிடம் இருந்து காரில் தப்பிச்செல்ல முயல, மீண்டும் அரிவாளை சுழற்றியிருக்கிறான் அந்த ரவுடி. அப்போது ஏற்பட்ட பதற்றத்தில் மக்கள் கூட்டம் அலறியடித்து ஓடியது. இதுதொடர்பான வீடியோக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாக தீயாய் பரவ, நெல்லை போலீசாரின் கவனத்திற்கு சென்றது இந்த வீடியோ.

Advertisment

rowdy

rowdy

அதனையடுத்து காவல் ஆணையர் பாஸ்கரனின் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு அந்த கடைக்கு வந்த தாழையூத்தை சேர்ந்தரவுடி முருகானந்தம் கடையில் நெய் பாட்டிலை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும், இதனைகண்டுகொண்ட கடை ஊழியர்கள் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் ஊழியர்களை வெட்ட மீண்டும்வெட்டருவாளுடன் கடைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Advertisment

rowdy

மேலும் போலீசார் நடத்திய விசாரணையின் போதுகழிவறையில் வழுக்கி விழுந்ததாகவும் ரவுடி கூற, அரசு மருத்துவமனைக்கு ரவுடியை காவல்துறையினர்கூட்டி சென்றனர். அங்கு அவனுக்கு வலதுகையில்மாவுக்கட்டு போடப்பட்டது.அந்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.