Advertisment

பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ரவுடி குண்டாசில் கைது!

சேலத்தில், காதலனுடன் வந்த பெண்ணை ஆபாசப்படம் எடுத்து மிரட்டி, நகைகளைப் பறித்த ரவுடி வெங்கடேசனை இரண்டாவது முறையாக காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

 Rowdy arrested  in kundass for sexually assaulting woman

சேலத்தை அடுத்த வீராணம் அருகே உள்ள தைலானூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). கடந்த மார்ச் 22ம் தேதியன்று, கொண்டலாம்பட்டி அருகே பட்டபிளை மேம்பாலத்தின் அடியில் காதலனுடன் வந்த இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார். மேலும் அவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார். காதலன் அணிந்திருந்த பிரேஸ்லெட்டையும் பறித்துக்கொண்டார்.

Advertisment

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வெங்கடேசனை தேடி வந்தனர். ஏப்ரல் 7ம் தேதி, சிவதாபுரத்தில் குமார் என்பவரிடம் வீச்சரிவாளைக் காட்டி அவரிடம் இருந்து 950 ரூபாய் மற்றும் வெள்ளி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை அன்று மாலையிலேயே கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையின்போது, கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி, தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு 78 வயதான மூதாட்டி ஒருவரிடம் 9 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்ட சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

 Rowdy arrested  in kundass for sexually assaulting woman

இதுபோன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வெங்கடேசனை ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு, காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கொண்டலாம்பட்டி ஆய்வாளர் புஷ்பராணி, மாநகர துணை ஆணையர் ஷியாமளாதேவி ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், ரவுடி வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசனிடம் குண்டர் சட்ட கைது ஆணை வியாழக்கிழமை (மே 16) சார்வு செய்யப்பட்டது.

video Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe