Rowdy arrested by police

திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சந்துரு (எ) சந்திரசேகர்(28) என்பவர் தொடர்ந்து பல கொள்ளை வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்டு, சரித்திரப்பதிவேடு ரவுடியாக இருக்கிறார்.

Advertisment

இவர் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி திருச்சி மாவட்ட நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

Advertisment

சந்திரசேகர் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொள்ளை வழக்கில் ஈடுபடுதல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் சந்திரசேகர் மீது பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் அவர், நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

சந்திரசேகர், தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறியதால், அவர் மீதியுள்ள 173 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சந்திரசேகர் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment