பொம்மையார்பாளையத்தை சேர்ந்த பச்சையப்பன்(26), மறைந்த பிரபல ரவுடி தாதா மணிகண்டனின் கூட்டாளி ஆவார். இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று ஆரோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பொம்மையார்பாளையத்தில் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த பச்சையப்பனை போலீசார் விசாரித்துள்ளனர்.

Rowdy Arrested

Advertisment

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோவில் உதவி ஆய்வாளரை ஆபாசமாக திட்டி பச்சையப்பன் வெட்ட முயன்றாராம். அவரை கைது செய்த ஆரோவில் போலீசார் நீதிபதி முன் ஆஜர் படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.