ananth

காவலரை வெட்டிய ரவுடு ஆனந்தன் சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

Advertisment

சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரவே, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர் ராஜவேலு அவர்களை எச்சரித்தார். உடனடியாக கலைந்து செல்லுமாறு கூறினார்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் திடீரென ராஜவேலுவை தாக்கியது. அவரை பார்த்து தனியாகத்தான் வந்துள்ளான். போட்டு தள்ளுங்கடா என்று கூறிய படியே போலீஸ்காரர் ராஜவேலுவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. ரவுடி ஆனந்தன் போலீஸ்காரர் ராஜவேலுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இடது காது, கன்னம் ஆகிய இடங்களிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக ரவுடி ஆனந்தனும் கூட்டாளிகளும் தப்பி சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரவுடி ஆனந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போலீசாரிடம் இருந்து ரவுடி ஆனந்தன் தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisment