ஈரோட்டில் பயங்கர ரவுடி கைது! 

rowday arrested in erode

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த செல்லம்மாள் நகரைச்சேர்ந்தவர் மகேஷ் என்கிற மகேஸ்வரன்(38). இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி டாஸ்மாக் பகுதியில் கத்தியைக்காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் சிறைக்குச் சென்று ஒரு மாதத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் வெளிவந்துள்ளார். வெளியேவந்த மகேஸ்வரன் செலவிற்காக மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று குப்பைமேடு டாஸ்மாக் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் சந்தோஷ் என்ற நபரிடம், தான் பெரிய ரவுடி என்று கூறி மது அருந்த பணம் கேட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளார். மேற்படி நபர் கொடுத்த புகாரின் பெயரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவுடி மகேஸ்வரன் மீது மேட்டூர், ஓமலூர், மலையம்பாளையம், கோபிசெட்டிபாளையம், சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோக மூன்று கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

Erode police
இதையும் படியுங்கள்
Subscribe