Advertisment

முதல்வர் வருகையால் கோவையில் போக்குவரத்து மாற்றம்!

routes change in Coimbatore due to CM's visit

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22ஆம் தேதி கோவைக்கு வருகைபுரிந்தார். அதனால் அங்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் கோவை வந்ததையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘காலை 6:00 மணி முதல் மறுஅறிவிப்பு வரும்வரை கனரக வாகனங்கள் கோவை மாநகருக்குள் இயக்க அனுமதியில்லை.

Advertisment

அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் தொட்டிபாளையம் சந்திப்பு விரியம்பாளைம், கைகோலாபாளையம் வழியாக சத்தி சாலைக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கோல்டுவின்ஸ் சந்திப்பு, ஹவுசிங் யூனிட், காளப்பட்டி சாலையை அடைந்து சரவணம்பட்டி வழியாக சத்தி சாலைக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நவ இந்தியா சாலை, ராமகிருஷ்ணா கல்லூரி, 100 அடி சாலை மேம்பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்ல வேண்டும். திருச்சி சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சுங்கம் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு, அரசு மருத்துவமனை, லங்கா கார்னர், கூட்செட் ரோடு, பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

Advertisment

பழைய மேம்பாலம் வழியாக அவினாசி சாலையில் வரும் வாகனங்கள் ஜேஎம் பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, செஞ்சிலுவை சங்கம் ரயில் நிலையம் வழியாக திருச்சி சாலைக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் மற்றும் திருச்சி சாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுங்கம் மற்றும் புலியகுளம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் விருந்தினர் மாளிகை வழியாகச் செல்ல அனுமதியில்லை. மாற்று வழியாக அவினாசி சாலைக்குச் செல்ல டிஐஜி அலுவலகம் வந்து ரெட்ஃபீல்ட் வழியாகப் புலியகுளம் சென்று, இடதுபுறம் திரும்பி கிட்னி சென்டர் வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

எல்.ஐ.சி. சாலையில் வாகனங்கள் செல்லக் கூடாது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர் அவினாசி, பல்லடம் செல்லக் கூடிய வாகனங்கள் காந்திபுரம் சந்திப்பு, ஆர்.வி.ரவுண்டானா, மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மணிஸ் பள்ளி சந்திப்பு வழியாக லட்சுமி மில் சந்திப்பில் அவினாசி சாலையை அடைந்து மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அவினாசி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வர வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஜிகேஎம், அண்ணா சிலை, எல்.ஐ.சி. வழியாக வராமல், லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

police cm stalin Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe