Advertisment

ரூட்டு தல யார்..? அடிதடியில் ரயிலை நிறுத்திய மாணவர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல யார் என்ற தகராறில் இரு பிரிவாகப் பிரிந்து பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநில கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர் கடற்கரை சந்திப்பில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரூட்டு தல யார் என்ற விவகாரத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ராயபுரம் ரயில் நிலையம் அருகே சென்ற போது அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிற்க வைத்த மாணவர்கள் ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். பிறகு இரு தரப்பினரும் கற்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 8 மாணவர்களை மடக்கிப் பிடித்து எழும்பூர் ரயில்வே காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் தப்பியோடிய மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.

Advertisment
student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe