Advertisment

கழிவுநீர் தொட்டியில் அழுகிய சடலம்... நால்வர் கைது

Rotten body in the sewer tank ... Four arrested

Advertisment

செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியிலிருந்து அழுகிய சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு பெருமாள்கோவில் எதிர்புறம் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பயன்படுத்தப்படாமல் கழிவுநீர் தொட்டி ஒன்று இருந்துள்ளது. அந்த தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாகப் பொதுமக்கள் புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நேற்றிரவு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கழிவுநீர் தொட்டியின் மேல் பகுதியை அகற்றினர். அப்பொழுது அந்த தொட்டிக்குள் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் ஒன்று கிடந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில் நான்கு பேர் சந்தேகத்திற்கிடமாக உலாவி வந்தது தெரியவந்தது.

Rotten body in the sewer tank ... Four arrested

Advertisment

Rotten body in the sewer tank ... Four arrested

இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கும் போது சக கூட்டாளிகள் இடையே மோதல் ஏற்பட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த முன்பின் தெரியாத நபர் ஒருவர் மீது இருசக்கர வாகனத்தில் உரசி உள்ளனர். ஏற்கனவே மது வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபத்திலிருந்த அந்த நால்வரும் அவரை கல்லால் தாக்கி அடித்துக்கொன்று தொட்டியில் வீசியுள்ளனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்த போலீசார் அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident police Chengalpattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe