செவிலியர்களை கவுரவித்த ரோட்டரி சங்கத்தினர்!

Rotary Club honors nurses

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் கரோனா போன்ற கடுமையான காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், மற்றும் கிராம செவிலியர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்று எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் சிறப்பு திட்ட தலைவர் டாக்டர் ராஜேஷ் வரவேற்றார், சிறப்பு திட்ட தலைவர் முத்துக்குமாரசாமி இறைவணக்கம் வாசித்தார், மாவட்ட தலைவர் வின்சென்ட், அரசு மருத்துவர் ஸ்ரீதர் , பொருளாளர் முருகன் சிறப்பு திட்ட தலைவர் நந்தகுமார், உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தேன்மொழி சிறப்புரையாற்றினார். பின்னர் 50 செவிலியர்களை பாராட்டி பட்டு அங்கவஸ்திரம் போடப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிச்சமுத்து, சுகாதார ஆய்வாளர் ரவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

nurses rotary club ulundurpet
இதையும் படியுங்கள்
Subscribe