Skip to main content

செவிலியர்களை கவுரவித்த ரோட்டரி சங்கத்தினர்!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021
Rotary Club honors nurses

 

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில்  கரோனா போன்ற கடுமையான காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள்,  மற்றும் கிராம செவிலியர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இன்று எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  

 

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் சிறப்பு திட்ட தலைவர் டாக்டர் ராஜேஷ் வரவேற்றார், சிறப்பு திட்ட தலைவர் முத்துக்குமாரசாமி இறைவணக்கம் வாசித்தார்,  மாவட்ட தலைவர் வின்சென்ட், அரசு மருத்துவர் ஸ்ரீதர் , பொருளாளர் முருகன் சிறப்பு திட்ட தலைவர் நந்தகுமார்,  உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தேன்மொழி சிறப்புரையாற்றினார். பின்னர் 50 செவிலியர்களை பாராட்டி பட்டு அங்கவஸ்திரம் போடப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.  இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிச்சமுத்து,  சுகாதார ஆய்வாளர் ரவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து; 2 பேர் பலியான சோகம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A subsequent incident; Tragedy with 2 peoples

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.