Advertisment

காதலர் தினம்; ரோஜா பூக்களின் விலை 4 மடங்கு உயர்வு

Rose prices rise on Valentine's Day

நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர்கள்தங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் பகிர்ந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். அதிலும் காதலன் தன் காதலிக்கு எத்தனையோவிலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்தாலும்அதில் ரோஜாவுக்கு என்றுதனி இடம் உண்டு.

Advertisment

இந்த நிலையில்தான் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்துள்ளது. அத்துடன் காதலர் தினத்திற்காக ஓசூர், ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பூ மார்க்கெட்டிற்கு ரோஜா பூக்கள் குவியத் தொடங்கியுள்ளது. மேலும் காதலர் தினத்தை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு ஸ்டெம் ரோஜா பூக்கள்கட்டு ரூ. 150க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 500 வரை ஒரு கட்டு விலை அதிகரித்துள்ளது. மேலும் மற்ற ரோஜா பூக்களும் வழக்கத்திற்கு மாறாக விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

rose
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe