Advertisment

தாமதமான ரோஸ் மில்க்; கடை ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்

 Late rose milk; Brutal assault on shopkeeper

Advertisment

சென்னை அண்ணா நகரில் கடை ஒன்றில் ரோஸ் மில்க் கொண்டு வர கடை ஊழியர் தாமதம் செய்ததால் இளைஞர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் 'கோரா' என்ற காம்ப்ளக்ஸ் பகுதியில் நிறைய உணவகங்கள் உள்ளது. இதில் ரோஸ் மில்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர் ரோஸ் மில்க் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ரோஸ் மில்க் கொடுப்பதற்கு கடை ஊழியர்கள் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால்மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கடை ஊழியரை கொடூரமாகத்தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரோஸ் மில்க் கடை உரிமையாளர் புகார் கொடுத்துள்ள நிலையில், சிசிடிவி காட்சி ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai food
இதையும் படியுங்கள்
Subscribe