திருச்சி மலைக்கோட்டையில் கடந்த மாதம் 16ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வு நடத்த வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று (31.07.2021) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் ஆகிய 5 கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக விரைவில் ரோப் கார் அமைக்கப்படும்” என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஐந்து கோவில்களில் ரோப் கார் அமைக்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
Advertisment