Advertisment

ஓயாத ரூட் தல பிரச்சனை! 9 மாணவர்கள் கைது!

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் ரூட் தல பிரச்சனை மட்டும் ஓயாது என்பதற்கு சான்றாக மேலும் மேலும் ரூட் தல பிரச்சனை முற்றுப்புள்ளி வைக்கப்படாத ஒன்றாகவே நீடித்து வருகிறது.

Advertisment

நேற்று சென்னை மாநில கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 25 பேர் மாலை கல்லூரி முடிந்ததும், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தனர். அப்போது மாணவர்கள் ரூட்கென தனி வாட்சப் குரூப் மூலமாக ஒரு பிரிவினர் இன்னோறு பிரவினை இழிவுபடுத்தும் வகையில் இருவரும் மாறி மாறி திட்டியுள்ளனர்.

''root thala'' issue-9 students arrest

பிறகு பிரச்சனை உச்சத்திற்கு சென்றநிலையில் இருவரும் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ராயபுர மாணவர்கள் சக நண்பர்களுக்கு செல்போனில் தெரிவித்துள்ளனர். பின்னர் தாக்குதல் நடத்திய மாணவர்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கம் செல்லும் ரயிலில் சென்றனர். மின்சார ரயில் ராயபுரம் அருகே சென்றபோது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ராயபுரத்தை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ரயில் பெட்டி மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

Advertisment

ஒரு கட்டத்தில் ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் ரயில் பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை பாதி வழியிலேயே நிறுத்தியுள்ளனர்.நடு வழியில் ரயில் நின்றதால் பயணிகள் சிலர் இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிலர், காவல்துறை அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அதில் ஆதித்யா, கணேஷ் அபிஷேக், தீனதயாளன், ஹேம்நாத், தமிழ்செல்வன், வாணிவர்மா, கார்த்திக் உள்ளிட்ட 9 மாணவர்களை காவல்துறை மடக்கி பிடித்தனர். பிறகு அனைவரையும் எழும்பூர் ரயில்வே போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் ஐபிசி 160 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

''root thala'' issue-9 students arrest

இது தொடர்பாகமாநிலகல்லூரி முதல்வர் பத்மினி அவர்கள் கூறுகையில், இது ரூட் பிரச்சனை போல தெரியவில்லை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாண்வர்களும் இடையே மோதல் ஏற்பட்ட பிரச்சனைதான். தற்போது இதில் தொடர்புள்ள மாணவர்களை விசாரித்து வருகிறோம். அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல இதுபோன்ற சம்பவம் நடக்காமல்இருக்க மாணவர்களிடைய மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்த டூத் தல பிரச்சனைகளை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல் கல்வியில் ஏற்படும் பிரச்சனையாகவே பார்க்கவேண்டியுள்ளது. இது போன்ற பிரச்சனையை அரசியல் கட்சிகளே ஊக்கப்படுத்துகிறது அதற்கு சான்றாகவே சென்ற தேர்தலில் ரூட் தல மாணவர்களை அழைத்து தனி கூட்டம் போடப்பட்டு தேர்தலில் பணிக்கு பணம் கொடுக்கப்பட்டது என்கிறார் இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் மாரியப்பன்.

Chennai new college police rout thala student Warning
இதையும் படியுங்கள்
Subscribe