Advertisment

வீட்டின் மேற்கூரையைப் பிரித்து நகை, பணம் கொள்ளை!

roof of the house was separated and gold and money were stolen

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த கல்யாணி என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்நிலையில் கல்யாணி வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓடுகளை பிரித்து வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வீட்டிற்கு வந்த கல்யாணி வீட்டின் மேற்கூரை பிரித்து பீரோவில் இருந்த பணம் நகை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குடியாத்தம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Theft Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe