/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/170_11.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், மழை பொழிவு நான்காம் தேதி வரை நீடிக்கும் என்றும் நவம்பர் 1 முதல் மழை பொழிவின் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள பிரகாஷ் ரெட்டி காலனியில் லதா என்பவரின் வீடு இருக்கிறது. இவ்வீட்டில் ஏறத்தாழ 10 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சாந்தி என்ற பெண் உயிரிழந்துள்ளார். காலை 6.30 மணியளவில் வெளியில் வந்த போது அவரின் மீது மேற்கூரை விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரைக் கண்டதும் ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தனர். நெடு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்அவரைப் பரிசோதித்ததில் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புளியந்தோப்பு காவல்துறையினர்சாந்தியின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)